search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டின் கதவை உடைத்து கொள்ளை"

    வீட்டின் கதவை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான நகை - பணம் மற்றும் பொருட்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    மதுரை:

    மதுரை எல்.ஐ.சி. நகர் எல்.ஐ.சி. காலனியைச் சேர்ந்தவர் சீதாராமன் (வயது 41). இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். நேற்று அவர்கள் வீடு திரும்பினர். அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

    இதுகுறித்து அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டிற்குள் இருந்த 11 பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள், எல்.இ.டி. டி.வி. மற்றும் ரூ.15 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக சீதாராமன் தெரிவித்தார். கொள்ளைப்போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

    அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

    தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த சடையார்கோவில் வடக்கு தெருவை சேர்ந்த துரைமாணிக்கம் மனைவி ராஜலட்சுமி (வயது 58). கணவர் இறந்து விட்டதால் ராஜலட்சுமி தனியாக வசித்து வந்தார். அவர் விவசாய கூலிவேலைக்கு சென்று வருவார்.

    இந்த நிலையில் நேற்று மாலை ராஜலட்சுமி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இதனை நோட்ட மிட்ட மர்ம நபர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து ஒரு பவுன் நகை, 300 கிராம் வெள்ளி பொருள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்று விட்டான்.

    வீடு திரும்பிய ராஜலட்சுமி கொள்ளை நடந்து இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி அவர் இன்று காலை தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்.

    மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 24 பவுன் மற்றும் ரூ.36 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    மதுரை:

    மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் சரகத்திற்குட்பட்ட விராட்டிபத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அழகுமீனா (வயது 41). இவர்களது மகள் அபிநயா கல்லூரி மாணவி. செல்வராஜ், கத்தார் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். மகளுடன் வசித்து வந்த அழகுமீனா, கடலாடியில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். நேற்று காலை அபிநயா வீட்டை பூட்டிவிட்டு கல்லூரிக்குச் சென்றார். மாலையில் வீடு திரும்பிய அவர், கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தாயார் அழகுமீனாவுக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 24 பவுன் தங்க நகைகள், ரூ.36 ஆயிரம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில், அழகு மீனா புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தர்வகோட்டை அருகே 2 வீடுகளில் பின்பக்க கதவை உடைத்து உள்ள புகுந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் துணிகளை கொள்ளையடித்து சென்றனர்.
    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள பிசானத்தூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் ராமதாஸ்(வயது 65). இவருடைய வீட்டில், அதே பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலுக்கு சொந்தமான 30 பவுன் நகைகள் உள்ளன. தற்போது ராமதாஸ் சென்னையில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமதாஸ் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் நகைகள் இருந்த பெட்டகத்தை உடைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் பெட்டகத்தை உடைக்க முடியவில்லை. இதனால் பெட்டகத்தில் இருந்த கோவிலுக்கு சொந்தமான 30 பவுன் நகைகள் தப்பியது.

    இதையடுத்து மர்மநபர்கள், ராமதாஸ் வீட்டின் அருகே உள்ள சின்னையன் என்பவருடைய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரத்து 500-ஐ எடுத்து கொண்ட அவர்கள், வீட்டில் இருந்த பீரோவை வெளியே தூக்கி வந்து, பீரோவை உடைத்து பார்த்தனர். ஆனால் பீரோவில் பணம் இல்லை. இதனால் பீரோவில் இருந்து துணிகளை வெளியே தூக்கி வீசியுள்ளனர்.

    பின்னர் மர்மநபர்கள் அதே பகுதியில் உள்ள கோவிந்தராஜ் என்பவருடைய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த துணிகளை எடுத்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவங்களின்போது சின்னையன், கோவிந்தராஜ் ஆகியோர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ×